“நன்கொடை கொடுங்கள், பணத்தை மட்டுமல்ல!” இவ் வாசகம் தான் இங்கே பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
சமீபத்தில், தமிழ்நாட்டை பற்றி ஒரு பெருமிதமான செய்தியை படித்ததை தொடர்ந்து, என்னை இந்த பதிவை எழுத தூண்டியது. அது,
உறுப்பு தானத்தை பற்றியது
தமிழ்நாடு, உடலுறுப்பு தானத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அண்மையில் தமிழ்நாடு அரசு, உடலுறுப்பு தானத்தை பதிவு செய்வதற்காக, “TRANSTAN” என்ற சிறப்பு தளத்தை ஆன்ட்ராய்டு கைப்பேசியில் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியதுடன், இதுவரை 5933 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முயற்சி நல்ல பலனை கொடுத்து, பொது மக்களும் முன்வந்து தானம் கொடுக்கின்றனர். நீங்களும் ஏன் செய்யக்கூடாது ?
உடலுறுப்பு தானத்திற்காக தங்களை பதிவு செய்து கொண்ட பலர் செய்யும் மிகப் பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் விருப்பத்தை தங்கள் அன்பிற்குரியவர்களிடம் தெரியப்படுத்துவதில்லை..
உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் தங்கள் உறுப்புகளை வழங்குவதற்கு பதிவு செய்துள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கவனத்தை ஈர்ப்பதே இங்கு அவசியமாகிறது.முதலில் உங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் நினைப்பதைவிட பலரின் உயிர்களை காப்பாற்ற உங்களின் 10 நிமிடங்கள் போதுமானது. அரசாங்கத்தின் இணையதள முகவரியை நான் கீழே குறிப்பிடுகிறேன். நீங்கள் அதை பயன்படுத்தி உடலுறுப்பு தானத்திற்கு பதிவு செய்யலாம், ஆனால் நீங்கள் செய்ததை யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்தால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே உங்கள் நெருக்கமானவர்களிடம் நீங்கள் உடலுறுப்புகளை தானமாக வழுங்குவதற்க்கு ஆர்வம் காட்டியுள்ளீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்.
உங்கள் பெற்றோரை சமாதானப்படுத்துவது கொஞ்சம் கடினம்தான். முடியாத செயல் என்று எதுவுமில்லை. உங்களால் முடியும்.
உங்கள் நெருக்கமானவர்களிடம் நீங்கள் உடலுறுப்புகளை தானமாக வழுங்குவதற்க்கு ஆர்வம் காட்டியுள்ளதை தெரியப்படுத்துங்கள். நான் உறுப்பு தானம் செய்ய விரும்புகிறேன் என்பதை என் நண்பர்களுக்கு இங்கே தெரியப்படுத்துகிறேன். நான் உறுதியளிக்கிறேன்.
உங்களை கவரக்கூடிய சில சுவாரிஸ்யமான தகவல்களை சொல்கிறான்,
ஒரு நபரின்,
உடலுறுப்பு தானம் 7 உயிர்களை காப்பாற்ற முடியும்.
கண் தானம் செய்வதால் 2 நபர்களுக்கு பார்வை கிடைக்கும்.
வருடத்திற்கு ஒரு முறையாவது, ஒரு யூனிட் ரத்ததானம் செய்வதால் நீங்கள் நினைத்திராத அளவுக்கு நன்மை பயக்கும்.
அனைத்திற்கும் மேலாக,
நீங்கள் இருமுறை வாழ முடியும்.
கேட்பதற்கு நன்றாக உள்ளதா? உதவ உற்சாகம் கூடுகிறதா?
உங்களை நீங்களே பதிவு செய்துகொள்வதற்கு சில சரிபார்க்கப்பட்ட வலைத்தளங்கள்.
http://notto.nic.in/ – National Organ and Tissue Transplant Organization (NOTTO) என்ற அமைப்பை இந்திய அரசின் Directorate General of Health Service, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
https://transtan.tn.gov.in/ – Transplant Authority of Tamil Nadu
http://www.mohanfoundation.org/ – தொண்டு நிறுவனம்
தற்சமயம் பதிவு செய்ய நேரம் இல்லையா?
உங்களின் வேலை காரணமாக, பின்னர் பதிவு செய்ய நினைத்தால், கீழே குறிப்பிட்டுள்ள எண்களை , உங்களுடைய தொடர்பு பட்டியலில் சேமித்துக்கொள்ளவும். தேவைபடும்பொழுது தொடர்புகொள்ள ஏதுவாகயிருக்கும்.
1919
இந்த என்னை தொடர்பு கொண்டால், உங்கள் அருகிலுள்ள கண் தான வங்கியுடன் இணைக்கப்பட்டு, நீங்கள் அவர்களுடன் இணையலாம்.
18001037100
தேசிய உடலுறுப்பு தானம், மோகன் அறக்கட்டளை மூலம் கட்டணமில்லா இலவச சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த எண்களை சேமிக்க மந்தமாகவுள்ளதா?
இந்த பதிவை Facebook மற்றும் வாட்ஸாப் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும்.
இந்த பதிவில் பயனுள்ள தகவல்கள் நிறையவுள்ளது. இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நான் பதிவு செய்து இருக்கிறேன். நீங்கள் எப்போது பதிவு செய்ய போகிறீர்கள்?
References
Translated from Balasubramani‘s post: Organ donation and its awareness