சமூகவலைத்தள செய்திகள் அனைத்தும் உண்மையா ?

சமூகவலைத்தளத்தில் நாம் படிக்கும் செய்திகள் அனைத்தும் உண்மை இல்லை. அவ்வாறு நாம் படிக்கும் செய்திகளை உண்மை என்று கண்மூடித்தனமாக நம்பி அவற்றை பகிர்கிறோம்.

அவ்வாறு ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு காட்டுத்தீ போல் பரவியது. “வடமாநிலத்திலுருந்து ஒரு கடத்தல் கும்பல் நம் மாநிலத்தில் நுழைந்துள்ளதாகவும், அவர்களின் நோக்கம் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை திருடி விற்பதும், எனவே தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும்” என்றுருந்தது. இதை ஒரு சாதாரணமான செய்தியாக நாம் படித்துவிட்டு கவனமாக இருப்பதில் தவறொன்றுமில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அவ்வாறு இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் நிகழப்பவை வேறு.

இந்தியா முழுவதும் இந்த செய்தியால் இதுவரை 27 பேர், சந்தேகத்தின் பேரில் மக்களால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்முற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும், 3 உயிர்கள் பலியாகி உள்ளது.

சென்ற மே மாதம், திருவண்ணாமலையில் தங்கள் குலதெய்வ கோயிலை தேடி சென்ற 65 வயதுடைய மூதாட்டியை கிராம மக்கள், சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொன்றார்கள். அவருடைய உறவினர்கள் 4 பேரும் காயமுற்றர்கள்.

இது போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திர, தெலுங்கானா, வடக்கே உள்ள ஜார்கன்ட், அசாம், திரிபுரா, குஜராத் எனப் பல்வேறு இடங்களில் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

கிராமப்புறம் மட்டுமின்றி, நகரத்தில், சென்னையின் மத்திய பகுதிகளிள் ஒன்றான தேனாம்பேட்டையில் சென்ற வாரம், வடமாநிலத்தவர் 2 பேர், சந்தேகத்தின் பேரில், பொது மக்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

  1. நமக்கு வரும் செய்தி உண்மையா என்று தெளிவுபடுத்தி பின்பு மற்றவர்களுக்குபகிரவும்.
  2. எந்தவொரு செய்தியையும் கண்மூடித்தனமாகபிநம்பி, மொழிப் பெயர்த்து பகிர வேண்டாம்.
  3. சந்தேகப்படும் நபர்களை கண்டால், 100 ஐ அழைக்கவும், ரோந்து பணியில் உள்ள காவலர்கள் விரைவில் நம்மை அடைவார்கள்.
  4. அந்நபர்களை நாம் அடிக்க வேண்டாம்.
  5. இது போன்ற சம்பவங்களை நீங்கள் காண நேர்ந்தால், சந்தேகத்குரிய நபரை காப்பாற்றி போலீஸிடம் ஒப்படைக்கவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வேலை தேடுவதற்காக மற்ற மாநிலங்களுக்கு மக்கள் பயணம் செய்கின்றனர், அவர்களை நம்பி ஒரு குடும்பம் வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறது.

சென்னையில் வட மாநிலத்தை சேர்த்தவர்கள் பலர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் கடத்தல்காரர்கள் அல்ல. யாரையும் கொலை செய்வதுற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.

மனிதநேயத்துடன் நடப்போம்.

யோசித்து செயல்படுவோம்.

நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s