மலையேறுதல்

சமீபத்தில் ஏற்பட்ட குரங்கிணி காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 உயிர்கள் நம்மை விட்டுச் சென்றிருக்கின்றன. இந்த சோகமான நிகழ்வு நம் அனைவருக்கும் சில கருத்துக்களை தெளிவுபடுத்துகிறது. அவை,

 1. காட்டுத் தீயை பற்றிய விழுப்புணர்வு , 
 2. மலையேறுதலின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்,
 3. எப்போது, எங்கு மலையேறுதல் வேண்டும்? (குறிப்பாக எந்த நேரத்தில்),
 4. அந்த காட்டில் இதற்குமுன் ஏற்பட்ட காட்டுத்தீ பதிவுகள்,
 5. அந்த இடத்தைப் பற்றிய அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பு. (பொதுவாக இந்த குறிப்பில் நாம் அதிக கவனம் செலுத்த மாட்டோம் ஆனால் இந்த குறிப்பு எவ்வளவு முக்கியமானதென்று நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்).

மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் சில சமயம் வேடிக்கையாக இருக்கலாம்.

இது போல் தகவல்களை தெரிந்து கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? நான் மலையேறுதலில் ஈடுபடலாமா வேண்டாமா? என்ற கேள்விகள் தோன்றலாம்.

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? குரங்கிணி மலையேறுதலின் போது காட்டுத்தீயில் சிக்கி கிட்டத்தட்ட 50% மக்கள் இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள், தீ காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். ஒரு சராசரி மனிதரால் 37% தீ காயங்களை மட்டுமே தாங்க முடியும் என்பது மீண்டும் நமக்கு சோகத்தை ஏற்படுத்துகிறது.

நான் என் நண்பர்களுடன் இருமுறை மலையேறியிருக்கிறேன். எனக்கு மிகவும் பழக்கமான என் நண்பர்களும் அவ்வப்போது மலையேறுதல் செல்வார்கள். ஆதலால் மலையேறுதல் செல்பவர்கள் மட்டும் இல்லாமல் என் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் சில வார்த்தைகளை கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் ஒருவர் கூட, குரங்கிணி காட்டுத்தீயை மையமாக வைத்துக்கொண்டு மலையேறுதலை ஊக்கமின்மை படுத்தக்கூடாது.

மலையேறுதல், ஒருவரின் வாழ்வில் ஒரு வளர்ச்சிமிகுந்த அத்தியாயம் ஆகும். இது உடல்நலம் மற்றும் மன நன்மைகளை தருகிறது. கவனம் மற்றும் நம்பகத்தன்மையை சீராக்கி, மன அழுத்தத்தை குறைப்பதால் அனைவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மலையேறுதல் செல்ல வேண்டும்.

எப்பொழுது மலையேறுதல் செல்லலாம்

வனத்துறையின், காட்டுத்தீயை பற்றிய “இடம் சார்ந்த மற்றும் தற்காலிக பகுப்பாய்வு (2006 – 2015)” தெரிவிப்பது என்னவென்றால்,  தமிழ்நாட்டில் காட்டுத்தீ, ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் அதிகரித்து மார்ச் மாதம் உச்சகட்டத்தை அடையும். பின்பு ஏப்ரல் மாதத்தில் இது குறைந்து மழைக்கால தொடக்கத்தில் முழுமையாக குறைந்துவிடும்.

தமிழ்நாட்டில் 48 சதவீத வன தீ விபத்துகள் மார்ச் மாதத்திலும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 72.4 சதவீதத்திலும் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் மணிநேர தீ விபத்துகள் (2006-2015)

TrekkingForestFire_Intensity
குறிப்பாக ஒரு நாளில் தீயின் தீவிரம்.

பகுப்பாய்வின் படி, முக்கியமாக தமிழ்நாட்டிலுள்ள தீ உணர்திறன் காடுகளில், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும், 4 – 11 AM மணி அளவிலும், 3 – 10 PM மணி அளவும் மலையேறுதலுக்கு உகந்ததான காலம் அல்லவென்று நமக்கு தெரிகிறது.

எளிமையோடு கூறவேண்டும் என்றால், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் தமிழ்நாட்டில் உள்ள காடுகளில் மலையேறுதலை தவிர்க்கவும்.

அரசு. விதிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்.

ஒரு வாரம் கழித்தும், மலையேற்றத்திற்கு அனுமதி அளித்தவர் யாரென்று இன்னும் சர்ச்சைகள் நிலவுகின்றன. குருங்கணியில் இருந்து உயர்மட்ட நிலையத்திற்கு மட்டுமே அங்கீகாரம் உண்டு என்றும் கொழுக்குமலைக்கு அல்லவென்றும், ஆனால் துரதிருஷ்டவசமாக சென்னை ட்ரெக்கிங் கிளப் (CTC) இந்த துயரத்தில் சிக்கிக்கொண்டது என்றும் வனத்துறை கூறுகிறது.

குரங்கணி கிராமத்தில் இருந்து 1கிலோமீட்டர் தூரம் தொலைவிலுள்ள சோதனைச் சாவடி வழியாக அவர்கள் செல்ல வில்லை என்றும், மலையேற்றத்துக்கு அவர்கள் எப்படிச் சென்றார்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் ஆதாரமில்லாமல் குழம்பியிருக்கின்றனர்.

 1. CTC சோதனைச் சாவடி வழியாக செல்லவில்லை.
 2. விதிகளின் படி, அந்த மாவட்ட வன அதிகாரியின் அனுமதியை பெறவில்லை.

தேனீ மாவட்ட வன அதிகாரிகள் கூறுவது என்னவென்றால், அங்கிருக்கும் உள்ளூர் வழிகாட்டிகள், இளைஞர்களிடம் சாகச உணர்வை ஊக்குவித்து, சவாலான பாதையில் அழைத்துச் செல்வோம் என்று வாக்குறுதி அளித்து, ஆபத்தான பாதையில் அவர்களை அழைத்து செல்கிறார்கள்.

எனவே இது போன்ற மக்கள், சிறந்த சாகசங்களுக்கு சவாலான பாதையில் உங்களை இட்டுச் செல்வதாயிருந்தால், அதை முழுமையாக தவிர்க்கவும்.

அரசாங்கத்தின் விதிமுறைகளை CTC பின்பற்றி இருந்தால் இந்த கோரமான சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். குரங்கிணி மலை பகுதியில் மலையேறுதல் வெகு காலமாக செயல்பட்டு வருகிறது என்றும் சிலர் கூறினர்.

பாதுகாப்பான மலை பகுதியில் தான் மலையேறுதல் செல்லப்போகிறோம் என்று உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு செல்லவும். அரசாங்கமும், சட்டவிரோதமாக உள்நுழையும் நபர்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தீ ஏற்பட்டதன் காரணம்

காட்டுத்தீ காடுகளைப்போல் பழையவை என்றாலும், பகல் மற்றும் இரவில் கிளர்ச்சி ஏற்படுத்துவதில் மனிதனின் ஈடுபாடும் உள்ளது. காட்டுத்தீ ஏற்பட்டதிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும் இயற்கை காரணங்கள், மின்னல் போன்ற பல்வேறு காரணங்களினால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு இருந்தும்,

99% காட்டுத்தீ, மனிதனால் உருவாக்கப்படுபவை.

அது, கீழ்வரும் குறிப்புகளில் ஒன்றாகவும் இருக்கலாம்.

 1. வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள்.
 2. மேய்ச்சல் புதுப்பித்தல் அல்லது காடுகளின் இழப்பில் விவசாய நிலத்தை திரும்பப் பெறும் யுக்தி.
 3. சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய சாட்சிகளை அழிக்க வேட்டைக்காரர்கள் மற்றும் மரம் கடத்தல்காரர்கள் உபயோகிக்கும் முறை.
 4. குற்றவாளிகளால் உண்டாக்கப்படும் தீ.
 5. சட்டவிரோத குவியல்களில் கழிவுகளை எரித்தல்.
 6. காடுகளின் விளிம்புகளில் வாழும் மக்கள், அவர்களது கால்நடைகளுக்கு புதிய புல் வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு தீ வைப்பனர்.
 7. மலைகளில் சாகுபடி முறைகளை மாற்றுவதற்கு.
 8. வன அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக.
 9. பயணிகள், தனியாக கூடாரம் போட்டுத் தங்கும் நபர்கள் அல்லது சுற்றுலா பயணிகளால் உருவாக்கப்பட்ட தீ, சரியாக அணைக்கப்படாத போதும், அல்லது வேறு எங்காவது ஏற்படுத்தப்பட்ட தீயில் இருந்து எஞ்சியுள்ள தீப்பொறி மூலமாகவும்,

இதுபோல் விபத்துக்கள் ஏற்படுகின்றன (ஏற்படுத்தப்படுகின்றன). மேலும் குரங்கிணி மலை பகுதிகளில் வெப்பத்தால் உலர்த்தப்பட்ட நீண்ட உயரமான புற்கள் தீ விரைவாக பரவுவதற்கு பெரிதும் காரணமாய் அமைந்தது.

சுற்றுலா வழிகாட்டிகளின் சில முக்கிய குறிப்புக்கள்

அனுபவம் வாய்ந்த சுற்றுலா வழிகாட்டிகள் சிலர், சில முக்கிய கருத்துக்களை நமக்கு தெரிவிக்கின்றனர். அவை,

 1. அனுபவம் வாய்ந்த நபர் கூட, இது போன்ற சூழ்நிலைகளில் (காட்டு தீ விபத்தில்) சிறிது பீதியடைவர்.
 2. தாமதமின்றி விரைவில் தப்பிக்கும் வழிப்பாதைகளைக் கண்டுபிடித்து தப்பித்துச் செல்ல வேண்டும்.
 3. தமிழ்நாட்டில் பெரிய மலைப்பாங்கான பகுதிகள் இருக்கின்றபோதிலும், அரசாங்கத்தால் மலையேறுதல் இங்கு ஊக்குவிக்கப்படவில்லை.

தேவையான நெறிமுறைகள்

ஏற்கனவே ரோந்து பணிகள், தீ மூட்டுவதை கட்டுப்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றி வருகின்றபோதிலும்,

முன் திட்டமிடல், தப்பிக்கும் முறைகளில் வழக்கமான பயிற்சிகள், நிலப்பரப்பு மற்றும் வனப்பகுதிகளுக்கு ஏற்றவாறு வழிகள் திட்டமிடப்பட்டு அமைத்திட வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ் (IFS) அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த பதிவை நீங்கள் மிகவும் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மீண்டும் நான் கட்டாயப்படுத்த காரணம் இருக்கிறது. ஏனென்றால், எனது அலுவலகத்திலோ அல்லது மற்ற இடத்திலோ தீயணைப்பு துறையினர் நெருப்பில் இருந்து தப்பிக்க பயிற்சிகள் கற்றுக்கொடுக்கையில் மக்கள் அதில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் கற்றுக்கொடுக்கும் ஒரு சிறு பயிற்சியும் ஒரு நாள் நமக்கு உதவலாம். ஆதலால் அது போல் பயிற்சிகளை இனிமேல் உத்தாசனப்படுத்தாதீர்கள்.

இந்த பதிவை மேலும் வலுப்படுத்த, நம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் எரிவாயு சிலிண்டர் (Cylinder) பற்றி சில தகவல்களை பகிர விரும்புகிறேன். உங்களுக்கு தெரிந்த சில குறிப்புகளையும் கருத்துப்பதிவில் நீங்கள் பதிவிடலாம்.

 • எரிவாயு சிலிண்டர் வெடிக்குமா?

இல்லை. சிலிண்டரில் இருந்து வாயு கசியும் போதே நீங்கள் அதை நிறுத்திவிடலாம். சில திரைப்படத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டவுடன் சிலிண்டர் வெடிப்பது போல் சித்தரிப்பது முற்றிலும் ஏமாற்றத்திற்குரியது.

 • எரிவாயு சிலிண்டர் கசியும் போது அதை கட்டுப்படுத்தும் பொருள் சீராக வேலை செய்யவில்லையென்றால் எப்படி அதை கட்டுப்படுத்தலாம்?

சணல்பையோ அல்லது படுக்கை தளையோ எடுத்து தண்ணீரில் நனைத்து சிலிண்டரின் வாயு வெளியாகும் துவாரத்தைப் போர்த்தி அணைத்து விடலாம். பின்பு உங்கள் சேவை வழங்குநரை தொடர்புகொள்ளலாம்.

 • ஆனால் எரிவாயு சிலிண்டர் எப்பொழுது வெடிக்கும்?

எரிவாய்வு முழுமையாக கசிந்தவுடன் சிலிண்டர் வெடித்துவிடும். தாமதிக்காமல் அதற்குள் தடுத்து நிறுத்தவும்.

என்ன செய்ய வேண்டும்?

இருப்பு மற்றும் தீ உலர்ந்த வனப்பகுதிகளை நன்கு கண்காணித்தல் வேண்டும் ஆனால் இந்த கடினமான நிலப்பரப்புகளில் தற்போதுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை கொண்டு சாத்தியப்படுத்துவது, சந்தேகத்திற்குரியது.

காட்டுத் தீ, வனவிலங்குகளின் வாழ்வாதாரங்களை மாற்றத்தக்கது. இதுபோல் எதிர்பாராத விபத்துக்களால் பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் உணவிற்கும் அதன் தங்குமிடத்திற்கும் இழப்பு ஏற்பட்டு அவை இடப்பெயர்ச்சி மேற்கொள்ளும்போது சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைகின்றன.

இறுதியில், முதல் மழையால் காடுகள் புத்துணர்ச்சிப் பெற்று மீண்டும் உருவாகும் ஆனால் அங்கு இறந்த 16 நபர்களின் குடும்பங்கள் நிரந்தரமாக சீர்குலைந்துவிட்டன.

அவர்களின் ஆத்மா சாந்தியடைய.

நன்றி.


சுற்றுசூழல்-மலையேறுதலின் விதிமுறைகள் உங்களுக்காக

அடுத்த சாகச செயலுக்கு எப்படி உங்களை தயார்படுத்திக்கொள்ளலாம்? ஒரு சிறிய பொருளும் உங்களுக்கு பெரிதும் உதவலாம்.

 1. மலையேறுபவர்கள், மலைகளின் தொடக்க புள்ளியை தாங்களாகவே வந்து அடைய வேண்டும்.
 2. போக்குவரத்தும், வழிகாட்டிகள்/பயிற்றுவிப்பாளர்களும் வனத்துறையில் நியமிக்கப்படுவார்கள்.
 3. மலையேறுபவர்கள் தங்கள் தனிப்பட்ட சாதனங்களை, தூங்கும் பைகளோடு சேர்த்து கொண்டு வர வேண்டும்.
 4. மலையேறுபவர்கள் பச்சைநிறமாக/மந்தமாக காட்சியளிக்கும் துணிகளை நல்ல காலணிகளோடு சேர்த்து  கொண்டுவர வேண்டும்.
 5. காடுகளில் உள்ள கடினமான நிலப்பரப்புகளையும் மலையேறுபவர்கள் காடுகளில் உள்ள வசதிகளை கொண்டே கடக்கவேண்டும்.
 6. மது, புகைத்தல், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை காட்டிற்குள் எடுத்துச்செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.
 7. வன அதிகாரிகள்/பயிற்சி பெற்ற வழிகாட்டிகளின் அறிவுறுத்தல்களுக்கு மலையேறுபவர்கள் கீழ்ப்படியவேண்டும்.
 8. வன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மலையேறுபவர்கள் நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.

இதனுடைய ஆங்கில பதிவு

Trekking? Don’t lose yourself without knowing this.

திருத்தியவர்

Mohan Vel

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s