பால். அது அவசியமா?

கல்கியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, அவரது மற்றொரு படைப்பான சிவகாமியின் சபதம் என் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் சென்னையில் நடந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் அப்படி என்ன தான் சிவகாமி சபதம் செய்தால் என்று தெரிந்து கொள்ளும் என் ஆர்வம், அந்த புத்தகத்தில் மற்றும் இல்லாது மற்ற சமூக ஆர்வ புத்தகத்திலும் சென்றது. கிட்டத்தட்ட பதினைந்து புத்தகங்கள் அதே இதழில் எடுத்த நான், கட்டாயம் இதன் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படி என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்த புத்தகம் தான் “பால் அரசியல்”.

உங்களுக்கு பால் புடிக்குமா? அப்படி என்றால் மனதை திடப்படுத்திக்கொண்டு இந்த பதிவை தொடரவும். பாலை பற்றிய பல உண்மைகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. நமக்கு கூறப்பட்ட கட்டுக்கதைகள் மற்றும் பல தெரியாத உண்மைகளை தெளிவு படுத்தவே இந்த பதிவை நான் மிகவும் ஆராய்ந்து எழுதியுள்ளேன்.

பால் புசித்தலுக்கு எதிராக பேசுவதற்கு முன் சில உண்மைகளை உங்களுக்கு விரிவு படுத்த விரும்புகிறேன். நாம் ஏன் பால் குடிக்கிறோம்?

 1. பாலில் அதிகம் சுண்ணச்சத்து இருப்பதால், எலும்புகளுக்கு அது ஆரோக்யம் தரும்.
 2. பால் அருந்தினால், ஊட்டச்சத்து குறைபாடுகளும் நீங்கும்.

அதனால், மேலே குறிப்பிட்டுள்ள உண்மைகளை நாம் ஆராய்ந்து, நம்மை மேம்படுத்துவது இங்கு அவசியமாக உள்ளது.

அதற்கு முன்னாள் தாய்ப்பால் ஊட்டல் பற்றிய பகுப்பாய்வும், அதன் முக்கியத்துவமும், பால் மாவு எப்படி சந்தையில் நுழைகிறது என்பது பற்றியும், பாலில் கலந்த அரசியலும் பற்றி தெரிந்து கொள்வது வாசகர்களுக்கு இந்த பதிவை நன்கு புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

தாய்ப்பாலை ஒடுக்குதல்

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அறிந்த பின், அதற்கு மாற்றான ஓர் உணவை உருவாக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து வல்லுநர்களின் நெடுநாள் கனவாக இருந்து வந்தது. ஏனென்றால் ஒரு குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கிடைக்காமல் போகும்?

 1. குழந்தையின் தாய் தவறிவிட்டால்
 2. குழந்தை உறுஞ்சுவதற்கு சிரமப்பட்டாள்
 3. குழந்தைக்கு செரிமான கோளாறு இருந்தால்

அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. இந்த சூழ்நிலையில் தான் கால்நடைகளின் பால் அல்லது அதிலிருந்து தயாராகும் பால் மாவு கொடுக்கப்படுகிறது. இதை ட்ரய் நர்சிங் (Dry Nursing) என்று அழைப்பர். இந்த முறையில், ஆடு, மாடு, குதிரை, அல்லது கழுதை போன்ற கால்நடைகளின் பால் கொடுக்கப்படுகிறது. இதில் கழுதையின் பால் மிகவும் சக்தியானது என்றாலும் அது குறைந்த அளவே கிடைத்ததால் மாட்டின் பாலே சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது.

இருந்தும், பெரும்பாலான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாடகைத் தாயின் மூலமே பாலூட்டினர். இந்த முறையையே வெட் நர்சிங் (Wet Nursing) என்று கூறுவர்.

நிறுவனங்கள் பால் மாவு அல்லது புட்டிப்பாலை உபயோகிக்க மக்களை எப்படி சமாதானப்படுத்தினார்கள்?

19ஆம் நூற்றாண்டில் நெஸ்டில் போன்ற நிறுவனங்கள், பால் மாவு சந்தையில் தங்கள் நிலையை நிறுத்திய பின் மக்கள் அன்றாட வாழ்வில் பால் மாவு உபயோகத்தை அதிகப்படுத்தியது.

மேலும் இயற்கைக்கு மாறான சில உண்மைகளையும் நம்பவைத்தனர். அவற்றில் சில,

 1. அது மலிவானது.
 2. எளிமையாக தயாரிக்க கூடியது.
 3. தாய்மார்கள், தங்கள் குழந்தைகள் இதை ஏற்றுக்கொண்டனர்.
 4. அதுவே ஊட்டச்சத்தின் மூல பொருள்.

இது வெட் நர்சிங்கை ஒடுக்குவதற்கே கையாளப்பட்டது.

நிறுவனங்கள் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலேயே புட்டிப்பாலை ஊட்ட ஆரம்பித்தனர். மருத்துவ உலகமும் இதை தங்களுக்கு தெரியாமலேயே ஆதரிக்க, தொழில்மயமான நாடுகளில், முக்கியமாக படிப்பறிவுள்ள மக்களிடையே தாய்ப்பாலூட்டுதல் குறைந்தது.

செயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு சோகமான வரலாறு இது.

தாய்ப்பாலை ஒடுக்கி, பால் பவுடர் ஊக்குவிப்பதை எவ்வாறு அவர்கள் ஆரம்பித்தார்கள்?

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை, குழந்தைப்பேரு ஒரு சமூக நிகழ்வாக இருந்தது. பின்வரும் காலங்களில் அது மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்டது. தினமும் மருத்துவமனைகளை நடத்துவதற்கு, நோயாளிகள் தேவை என்பதால் அவர்களை மருத்துவமனையில் அதிக நாள் தங்கவைத்து, கர்ப காலத்தை நீடித்து அவர்களால் தாங்கமுடியாத வலியை அனுபவிக்க செய்தனர்.  ஹார்மோன் மேலும் உட்செலுத்தப்பட்டு அறுவைசிகிச்சைக்கான வாய்ப்பை அதிகப்படுத்தின. அது தாய்மார்களுக்கு வலி மற்றும் பதற்றத்தையே பரிசாக தந்தன.

ஏற்கனவே பேறுகாலத்தில் வழங்கப்பட்ட வலிநீக்கிகளான பெத்தடின் போன்றவையும் டிரான்குவிலிசர் போன்ற அமைதிப் படுத்தும் மருந்துகளும் குழந்தைகளின் உறிஞ்சும் தன்மையில் தலையிட்டுச் சிரமத்தை உண்டாக்கியிருக்க, பேறுக்குப் பின் வழங்கப்பெறும் வலிநீக்கிகளும் தாய்ப்பாலின் வழி ஊடுருவி குழந்தைகளிடத்து தாய்ப்பால் குடிக்கும் ஆர்வத்தைக் குறைத்தன . இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டமுடியாமல் போக, அவர்கள் பால் மாவு அல்லது புட்டிப்பாலை தங்கள் குழந்தைகள் உயிர்வாழ நாடவேண்டியிருந்தது.

பால்சுரப்பு உடல் திறனை சார்ந்தது மட்டுமல்லாது மனம் சார்ந்ததும் கூட. மனமும் உடலும் சமநிலையில் இருக்க வேண்டும். ஒரு தாய்க்கு பாலூட்டும் நம்பகத்தன்மையில் போதுமான அளவு கவலைப்பட்டாலே பாதித் தோல்விதான். இது சில தாய்மார்களைத் தமக்குப் பால் சுரக்கவில்லை என்று நம்பும் அளவுக்கு இட்டுச் சென்று விடுகிறது. இதனால் பால்சுரப்பு நின்றும் போகிறது. இச்சூழலை பயன்படுத்தித்தான் ‘ஊட்டச்சத்துமிக்க முழுமையான தீர்வாக’வும், ‘நவீனமாக’வும், ‘சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக’வும் புட்டிப்பால் உள் நுழைகிறது.

2015ல் நடத்தப்பட்ட யுனெஸ்கோவின் (UNESCO) கணக்கெடுப்பு படி, 5ல் ஒரு தாய்மார்கள் தான் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றனர்.

சீம்பால்

பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் கர்ப்பகாலத்தில், சீம்பால் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போகிறது.

பெரும்பாலான தாய்மார்களுக்குச் சீம்பால் பற்றித் தெரிவதில்லை. குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு இது குறைந்த அளவுக்குச் சுரக்கும்போது அவர்கள் தனக்குத் தாய்ப்பால் சுரக்கவில்லையோ எனக் கவலைகொள்ளத் தொடங்க, அதுவே புட்டிப்பாலை நோக்கி நெருங்கச் செய்கிறது. இது குறைந்தளவே சுரந்தாலும் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புத் திறனை முழுவதும் வழங்கக்கூடியது. 

இந்த அச்சத்தைதான் பால்மாவு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

பீடியாஷோர் (Pediasure)  & சிமிலாக்  (Similac)

ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 200 தாய் சேய் நலவிடுதிகளை வடிவமைக்க உதவுகிறது அப்போட் லேபரட்டரி எனும் நிறுவனம். இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா எனத் தெரியவில்லை, பாலூட்ட இயலாத தாய்மார்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து வைக்கும் வகையில்தான் இக்கட்டிடத்தின் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் தாய்ப்பால் புகட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் தாயும் சேயும் ஒரே அறையில் இருப்பதற்கு மாறாகப் பிரித்து வைக்கப்பட்டு இருந்ததால் தாய்ப்பால் புகட்ட குழந்தைகளை வெகு தொலைவு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பது தாதிமார்களுக்கு எரிச்சலேற்படுத்தும் பணியாக அமைந்தது. எனவே புட்டிகளில் தயாராக இருந்த ஏற்கனவே நன்கொடையாக வழங்கப்பட்டிருந்த பால்மாவை இத்தாதிமார்கள் குழந்தைகளுக்கு எதுவாகவும் விரைவாகவும் வழங்கினர்.

மறைமுகமாக பால் மாவின் விற்பனையை பெருக்கும் இவர்கள், மிகவும் பிரபலமான பீடியாஷோர் (Pediasure) மற்றும் சிமிலாக் (Similac) பொருட்களை தயாரித்தது வருகின்றனர்.

இன்றளவும், சீனாவில் வாழும் மக்கள் தங்கள் தேநீரில் பால் சேர்ப்பதில்லை. அதையே சீனா டீ (China Tea) என்று நாம் அழைக்கிறோம். 

பெண்களை அவமதிக்கும் விளம்பரங்கள்

விளம்பரங்கள் மூலம் புட்டிபால் உபயோகத்தை அதிகரிக்க செய்த நிறுவனங்கள், புட்டிபால் பெண்மையின் ஓர் அங்கம் என்று கூறி பெண்மையை அவமதிக்கவே செய்தனர். அவற்றில் சில,

 1. பெண்கள் தாய் பால் கொடுத்தால், அவர்களால் அலுவலகத்துக்கு செல்ல முடியாது. வீட்டிலேயே தங்க நேரிடும். (அச்சுறுத்துதல்)
 2. தாய்ப்பால் மட்டும் குழந்தைகளுக்கு போதாது. குழந்தைகள் பசியால் வாடும். (மிரட்டல்)
 3. உழவுக்குடி மக்கள் மற்றுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவர். நவீன மற்றும் நாகரிக பெண்களின் வேலை அல்ல. (அவமதிப்பு)
 4. வெள்ளை இன பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டமாட்டார்கள். அது கருப்பு இன பெண்களின் வேலை. (இனவெறி)

புட்டிபால் ஒரு முறை கொடுத்தாயினும், அந்த தாய்க்கு தன் பால் சுரப்பு சுழற்சியில் குறைபாடுகள் ஏற்படுவதோடு, குழந்தையும் தாய்ப்பால் குடிக்கும் ஆர்வத்தை இழக்கிறது.

குழந்தை இறக்கப் போகிறது

ஏனெனில் தாய்ப்பால் முடிந்துவிட்டது

அம்மா … ஓ  அம்மா … குழந்தை அழுகிறதே …

க்ளிம் பால் கொடுங்கள் 

1950களில் ஆப்ரிக்காவின் அன்றைய பெல்ஜியன் காங்கோவில் KLIM நிறுவனம் பால்மாவை இப்படித்தான் விளம்பரம் செய்தனர். தாய்மார்களின் உணர்வுகளை உளவியல் ரீதியாகத் தூண்டும் வகையில் இவ்விளம்பரப் பாடல் அமைந்திருப்பதைக் கவனிக்கவும்.

வைட்டமின் டி (Vitamin D) குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்று சில விளம்பரங்கள் கூறுகின்றன. அனால் வெயிலில் சற்று நேரம் நின்றாலே நாம் வைட்டமின் டி பெறலாம். பால்தூளை விற்க விளம்பரங்களின் முயற்சியை கவனியுங்கள்.

ஒவ்வொரு சிசுவின் மூளையும் 75% மட்டுமே கருவறையில் இருக்கும்போது வளரும். மீதி 25% வளர்ச்சியை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும். இதை புட்டிப்பாலால் கொடுக்கமுடியுமா?

புட்டிப்பாலின் குறைபாடுகள்

யுனெஸ்கோவின் (UNESCO) கணக்கெடுப்பை கருதி, புட்டிப்பாலினால் ஏற்படும் குறைபாடுகளை இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

 1. அது வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும்.
 2. முன்னைவிட நுரையீரல் காய்ச்சலை குழந்தைகளிடத்தில் அதிகப்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் அதிகப்படுத்தியது.
 3. இப்போது வரை, பால் பவுடர் தயாரிக்க எந்த ஒரு நிலையான முறைப்படுத்துதலும் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டே நிறுவனங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளல் (Trial and Error) முறையை பயன்படுத்தி, பால் மாவை தயாரிக்கின்றனர்.
 4. இதை உண்ணும்போது, குடல் வீக்கம், நீரிழிவு, நிணநீர் புற்றுநோய், சீவு வடிதல், சிறுநீர் மூல நோய் தொற்று போன்ற நோயிகளின் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.

தாய்ப்பால் ஊட்டுதலுக்கு மாற்று

தாய்ப்பால் ஊட்டுதல், நம் நோய் மண்டலத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்க்கும் சக்தியை தந்து தாய்ப்பால் நம் வாழ்நாளில் ஒரு அடித்தளமாக அமைகிறது. அதனால் தாய்ப்பால் கொடுக்க இயலாத தாய்மார்களுக்கு, தாய்ப்பாலுக்கு மாற்றாக சில முறைகைளை விவரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

 1. தாய்ப்பாலை எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டலாம். மிக பழமையான முறையும் இதுவே.
 2. வெட் நர்சிங் (வாடகை தாய்) மூலம் தாய்ப்பாலூட்டலாம்.
 3. அண்மையில் அறிமுகமான breast pump நுட்பங்கள் மூலம் தாய்ப்பாலை சேகரித்து, குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
 4. பாலை 8 மணி நேரம் அரை வெப்பநிலையிலும், 24 மணி நேரம் குளிர்பெட்டியிலும், 3 மாதம் வரை 20 டிகிரி செல்சியஸ்யிலும் வைத்தும் பதப்படுத்தலாம்.

உலக நல அமைப்பும் (World Welfare Organisation) மேற்கண்ட முறைகளையே புட்டிப்பால் கொடுப்பதற்கு முன் பரிந்துரை செய்கிறது. நானும் அதே கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்.


மாட்டுப்  பால்

தாய்ப்பால் ஊட்டுதலை படிப்படியாக குறைத்து புட்டிப்பாலை நிலைநிறுத்தியவுடன் மாட்டுப்பாலுக்கான தேவை அதிகமானது. அதன் விளைவாக, தொழில்முறை பால் பண்ணைகள் வளர்ந்து உபரி பால் உற்பத்தி அதிகமான பின் அதை பாலாடைக்கட்டி, பனி கூழ், மற்றும் சாக்லேட் போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தினர். பால் இப்போது ஒரு இயற்கையான பொருள் அல்ல, அது தொழிற்சாலையில் உருவாக்கப்படும் செயற்கை பொருள். இந்த பாலை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுகர்ந்து வருகின்றனர். அதனால் இப்பலினால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சமூக மாற்றங்களை இப்போது நாம் பார்ப்போம்.

நாம் ஏன் பால் குடிக்கிறோம்?

சுண்ணாம்பு (கால்சியம்) வலிமையை பெற நாம் பால் குடிக்கிறோம் ஆனால் அது முற்றிலும் தவறு. நம் மீது விளம்பரங்களால் திணிக்கப்பட்ட கட்டுக்கதை தான் அது.

ஏன் சுண்ணாம்பு சத்து தேவை?

நம் உடம்பில் சுண்ணாம்பு சத்து குறைந்து வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புரை) என்னும் நோய் நம் எலும்புகளை பலவீனமாக்கிவிடும். இந்த நோயால் அவதிப்படும் ஒருவருக்கு, எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதை தவிர்பதற்கே சுன்னச்சத்து தேவைப்படுகிறது. பாலில் அதிக சுண்ணாம்பு சத்து இருப்பதால், அது  தினசரி உணவிற்கு அவசியம் என்று பெரும்பாலான மக்கள் நம்பி வருகின்றனர்.

அனால் அதுவும் உண்மை அல்ல, நான் விளக்கம் தருகிறேன்.

புரதத்தை அதிகமாக நுகரும்போது, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோயிகளுக்கு அது மூல காரணமாக அமைகிறது. அதிக புரதத்தை நுகர்வது ஒரு அமில மழை போல, அது எலும்பு மீது பெய்து, அதிலிருக்கும் கால்சியத்தைக் கரைத்து, சிறுநீரில் கலக்க செய்கிறது.

பால் அதிக புரதத்தைக் கொண்டிருப்பதால், நம்மைவிட சிறிதளவு பால் நுகரும் சில ஆசிய நாடுகள் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் குறைந்தளவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

rBGH (ரெக்கோம்பினண்ட் போவின் க்ரோத் ஹார்மோன்)

பால் சுரப்பு அதிகரிக்கும்படி மாட்டுக்கு உட்செலுத்தப்படும் ஒரு செயற்கை ஹார்மோன்

ஏன் rBGH செலுத்தப்படுகிறது?

பால் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மாடுகளை அதிக பால் சுரக்கவைக்க தேவைப்படுகின்றது.

பசுவில் அதிக பால் சுரக்கும் என்றாலும், அது பல அம்சங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது.

IGF (இன்சுலின்-போன்ற வளர்ச்சி காரணி) 1 என்ற புரதமானது நமக்கும் மாட்டிற்கும் ஒரே அளவில் காணப்படுகிறது. விரிவாக கூறினால், பசுவின் பாலை நாம் உட்கொள்ளும்போது, மாட்டின் IGF 1 நிலை நமக்கு கிடைக்கிறது.

IGF 1 நிலை தற்போது மனித உடலில் இயற்கையான அளவைவிட அதிகமாக இருப்பதால், மார்பக, குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

rGBH செயற்கை ஹார்மோன் உருவாக்கப்பட்ட 1993 இல் 1,57,000 பால் பண்ணைகள் இருந்தன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் அதே எண்ணிக்கை 71000 ஆக குறைந்துள்ளது. அதாவது 55 விழுக்காடு வீழ்ச்சி. மாடுகளின் எண்ணிக்கையும் 95 இலட்சத்திலிருந்து 91 இலட்சமாக குறைந்தது.

இதிலிருந்து, பால் உற்பத்தியும் குறைந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த காலகட்டத்தில் rBGH உபயோகத்தால், பால் உற்பத்தி 15 கோடி காலனிலிருந்து 17 கோடி காலனாகப் பெருகியிருந்தது.

மாடு உடனடியாக கர்ப்பம்தரிக்க மற்றும் அதிக பால் சுரக்க, இந்த ஊசி போடப்படுகிறது.

பால் மாவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொள்வோம். அதை உலர்த்தி, துண்டுகளாக உடைத்து, அரைத்து, தூளாக்கி, பல மாதங்களுக்கு ஒரு பெட்டியில் சேமித்து வைத்த பிறகு, மீண்டும் அதில் ரசாயன பொருட்களை கலந்து, தண்ணீர் சேர்த்து ஒரு புது மாம்பழமாக கொடுத்தால் நீங்கள் அதை உண்ணுவீர்களா? இது தான் பால் மாவு உற்பத்தியில் நடக்கிறது.

FSSAI (இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகாரசபை)

2011 ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் பால் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட உள்ளடக்கங்களைப் பற்றி FSSAI ஆய்வு செய்தபோது, தில்லியில் சுமார் 70% கலப்பு பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SNF (Solids-Not-Fat) சாலிட்ஸ்-நாட்-பாட் அளவு அதிகமாக இருந்தால், அது தரமான பால் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள், கனிம, மற்றும் புரதங்கள் இந்த SNF அளவைக் குறிக்கின்றன. உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் (2006) படி, இந்த அளவு 8.5 ஐ விட குறைவாக இருக்கக்கூடாது, ஆனால் 46% பாலில் இந்த அளவு குறைவாகவே இருந்தன.

SNF அளவை பெற மற்றும் பாலின் தேவையை பூர்த்தி செய்ய, பாலில் சேர்க்கப்பட்ட பதனச்சரக்குகள்

மேலும், பால் உற்பத்தியின் விலையை குறைத்து SNF அளவை அடைய, பின்வருபவை சேர்க்கப்பட்டன. அதாவது,

 1. யூரியா (புரதம் அதிகரிக்க)
 2. ஸ்டார்ச் (தடிமன் மற்றும் அதன் புளிப்பு காலம் நீட்டிக்க)
 3. குளுக்கோஸ்
 4. உப்பு
 5. சோப்பு
 6. நடுநிலைப்படுத்தும் பொருட்கள்
 7. பிஹார்மலின் (Pharmaline)
 8. நீர் வண்ணம்

இது அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் நாம் பல ஆண்டுகளுக்கு முன்பு உட்கொண்டிருந்த பொருட்கள் இவையே. இப்பொருட்களை பாலில் சேர்க்க பல காரணங்கள் இருந்தாலும், பாலின் தேவையே முக்கிய காரணமாக இருந்தது.

நம் தினசரி நுகர்வுக்கு போதுமான அளவு பால் கிடைக்கும்போதும், பாலின் தேவை ஏன் இன்னும் நிறைவேறவில்லை?

பால் பவுடர் நிறுவனங்கள், ஐஸ் க்ரீம் நிறுவனங்கள் மற்றும் காட்பரி (Cadbury) போன்ற
சாக்லேட் நிறுவனங்களுக்கு போதிய அளவு பால் வழங்குவதால், தினசரி
நுகர்வுக்கு பால் ஒரு குறைபாடாகவே உள்ளது.

வெண்மை புரட்சி

இந்திய வேளாண்மையில் உற்பத்தியை அதிகரிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சி பெரும் பண்ணையாளர்களுக்கே பயன்பட்டது, இதனால் சிறு விவசாயிகளுக்கு உதவ
முடியவில்லை. எனவே, சிறு விவசாயிகளுக்கு உதவ, நமது ஆராய்ச்சியாளர்கள் வெள்ளை புரட்சி என்று அழைக்கப்படும் ஒரு தனியான புரட்சி ஒன்றை கொண்டுவந்தார்.

ஆனால், இந்த புரட்சிக்கு முன் இந்தியாவில் பால் உற்பத்தி முதன்மை உற்பத்தியாக இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், அது விவசாயத்தின் உபரி உற்பத்தியாகும். இங்கு கால்நடைகள் மனிதர்களுக்கு பயனில்லாத தாவரங்களை சாப்பிட்டு வளர்கின்றன. ஆனால் மேற்கத்திய கால்நடை வளர்ச்சி முறை வேறுபட்டது. அவர்கள் கால்நடைகளை வளர்ப்பதற்கு ஒரு தனி இடத்தை உருவாக்கி அவற்றிற்கு உணவாக பயிர்களை அந்நிலத்தில் பயிரிடுவார்கள். எளிதாக சொல்வதெனில், ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நிலங்கள் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டன.

நான் ஏன் இப்போது வெண்மை புரட்சியை பற்றி கூறினேன்?

 மீண்டும் பால் தேவையை பூர்த்திசெய்யவே. மேற்கத்திய நாடுகளில் உள்ள கால்நடைகள் அதிக பால் கொடுப்பதால் அதை இங்கு கொண்டு வருவதன் மூலம் இங்குள்ள பால் தேவையை பூர்த்தி செய்வதோடு பாலின் விளையும் குறையும் என்று கருதினர். அதேபோல் கால்நடைகளை இங்கு கொண்டு வந்தனர் ஆனால் அதில் மீண்டும் சிக்கல் உருவானது.

 1. விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட சில கால்நடைகள் இறந்தன. இரண்டாம் வகுப்பு கால்நடைகள் பிறகு அனுப்பப்பட்டது.
 2. மேற்கத்திய கால்நடைகளுக்கு உணவுப்பொருட்களை வளர்ப்பதற்கு தனி இடங்கள் தேவைப்பட்டன.
 3. பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தது.

இது மீண்டும் பாலின் விலையை உயர்த்தியது மட்டுமில்லாமல் குறு விவசாயிகளால் அந்த கால்நடைகளை பராமரிக்க முடியாமற்போனது. பாலின் விலை ஏழை மக்களால் வாங்க முடியாத அளவிற்கு இருந்தது. வெண்மை புரட்சியும் குறு நில விவசாயிகளுக்கு அவ்வளவாக உதவவில்லை.

 முடிவுரை

முன்னதாக நகரங்களில் உள்ள மக்களுக்கு பாலை நேரடியாக உட்கொள்ளும் பழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. அவர்கள் பாலை கடைந்து தயிராக்கி, அதை மீண்டும் கடைந்து நெய் மற்றும் வெண்ணையை எடுத்து உண்பது மட்டுமில்லாமல் விற்றும் வந்தனர். இந்த முறை அவர்களை இருமுறை பயனடையச் செய்தன. நெய்யில் இருந்து பெறப்படும் மோரையும் விற்று குறுநில விவசாயிகள் இந்த முறையால் சிறப்பாக சம்பாதித்தனர். அதிக லாக்டிக் (Lactic) அமிலம் இருக்கும் மோர், அந்த நேரத்தில் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிற்றூர் காலநிலைக்கு ஏற்ற பொருளாக விளங்கிய நெய், நீண்ட நாட்கள் கெடாது என்பதால் மழைக்காலங்களில் ஊர்ப்புறங்களுக்கு ஏற்றவொரு உணவாக இருந்தது.

இவை அனைத்தையும் விடச் சிறப்பு இப்பொருளாதாரம் பெண்களின் கையில் இருந்தது என்பதுதான். எளிய பெண்களிடம் இருந்த இவ்வணிகப் பொருளாதாரம் வென்மைப் புரட்சி என்கிற பெயரால் தட்டிப் பறிக்கப்பட்டு இன்று பெரும் வணிக நிறுவனங்கள் வசம் சென்றுவிட்டது.

வெண்ணெய்யில் ஒரு முருங்கைக் கொழுந்தை கிள்ளிப்போட்டு நெய் காய்ச்சிய காலம் மறைந்து கொண்டிருக்கிறது. நெய் போன்று உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள் இன்று எளிய மக்கள் கைக்குக் கிடைக்கும் விலையிலும் இல்லை.

பால் என்பது இன்று பங்குச் சந்தை வணிகம். நெஸ்டில் போன்ற பால்மாவு நிறுவனங்கள், வாலஸ் போன்ற பனிக்கூழ் நிறுவனங்கள், காட்பரீஸ் போன்ற சாக்லேட் நிறுவனங்கள் முதலியவனவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் எகிறக் கொண்டிருக்க …

ஊர்ச்சந்தையில் மோர் விற்றுக்கொண்டிருந்த நம் கிழவிகளைக் காணோம்.

நான் பால் குடிக்க வேண்டுமா வேண்டாமா?

MilkEssential

கடினமான கேள்வி. இப்பொழுது பால் என்பது ஒரு இயற்கை பொருள். இது உங்கள் விருப்பம்.  இந்த பதிவு, இன்று நாம் கலப்பட பாலை நுகர்கிறோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் “கால்சியம்
மற்றும் வைட்டமின்கள் பெற பால் அவசியம்
” என்கிறக் கட்டுக்கதைகளை
அகற்றுவதற்கும் தான். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களில் இருந்து விலகி இருக்க பல இயற்கையான வழிகள் உண்டு. நீங்கள் இன்னும் குழம்பி இருந்தால்,

 1. வரத்தேனீர்
 2. கடுங்காப்பி

போன்று பால் இல்லாமல் தயாரிக்கப்படுகின்ற பானங்களை முயற்சி செய்து பார்க்கலாம்.

நன்றி.


இதனுடைய ஆங்கில பதிவு (English Version)

Milk. It is essential?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s