நான் விரும்பும் நூலகம்

நூலகம் என்னும் வார்த்தையை கேட்கும் போது நாம் உணரும் அன்பு, புத்தகத்தின் மீது உள்ள நம் காதல், புத்தக ஆசிரியரின் சிறந்த அறிவுக்கூர்மை ஆகிய அனைத்தும் நம்மை எப்போதும் வியப்படையச் செய்து கொண்டு தான் இருக்கும். இருந்தாலும், நாம் அனைவரும் அவரவர் படிக்கும் நூல்களை பற்றி பெரிதும் பகிர்ந்து கொல்வதில்லை. இந்த இடைவெளியை நிரப்புவதுப் போல், சைலன்ட் ரீடிங் (Silent Reading) என்னும் நிகழ்வைக் குறித்து சமீபத்தில் நான் முகநூல் வழியாக தெரிந்து கொண்ட தகவலை பற்றித்தான் கீழ் வரும் படிவத்தில் நாம் காணப்போகிறோம்.

லிட்டில் லவ் லைப்ரரி (Little Love Library) என்னும் நூலகம், Swetha என்பவரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அன்று முதல், சைலன்ட் ரீடிங் என்னும் நிகழ்வை, அண்ணா நகர் டவர் பார்க்கில் (Anna Nagar Tower Park) ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 – 8 வரை அவர்கள் (Swetha) நடத்தி கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டில் இருந்து, வெவேறு சேகரிப்புகளும் வாரந்தோறும் இடம் பெற்று வருவது, நம் கவனத்தை கவரக்கூடியதாகவே இருக்கும். நீங்கள் முன்னமே புத்தக பிரியாரை இருந்தால், உங்கள் புத்தகத்தை சைலன்ட் ரீடிங் நிகழ்வுக்குக் கொண்டு வந்து அதன் சிறப்பம்சத்தை மற்றவர்களுக்கும் விவரிக்கலாம்.

டவர் பார்க்கின் சுற்றுப் புறச்சூழல், இங்கிருக்கும் மாயை என்றே கூறலாம். அங்கே புத்தகம் படிக்கும் போது ஏற்படும் உள் மன அமைதி, ஒரு புத்துணர்ச்சி நிச்சயமாக  உங்களுடைய தனி நபர் வளர்ச்சியை மேம்படுத்தும். அங்கே (டவர் பார்க்கில்) பூரண அமைதி இல்லாவிட்டாலும், உங்கள் மனம் நிச்சயம் அமைதி அடையும்.

சைலன்ட் ரீடிங்கின் குறிக்கோள்

சைலன்ட் ரீடிங் நிகழ்வு முடிவின் போது தான், அந்த நிகழ்வின் ஆரம்பம் அல்லது குறிக்கோள் வெளிப்படுகிறது. அனைவரும் வட்ட வடிவில் அமர்ந்து, அந்த நிகழ்வில், தாங்கள் படித்த புத்தகத்தின் கதையை அல்லது அதன் உட்பொருளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தலாம். உங்கள் கருத்துகளும் வரவேற்கப்பட்டு, அந்த பகுதி முழுவதும் ஊடாடத்தக்க இருக்கும்.

me_in_llb

(Murali உடன் நான் உரையாடும் போது எடுத்த புகைப்படம். தனது முதல் புத்தகத்தை வெளியிட ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்)

மற்றவர்களிடம் உள்ள அகீத ஆர்வமும், புத்தகத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் ஆசையும், நம்மோடு அவர்களை ஒன்றிணைத்து விடுகிறது. சில பொழுது Swetha, தின்பண்டங்கள் மற்றும் சூப் கொடுத்து, தன்னால் முயன்ற வரை, நிகழ்வை மேம்படுத்துவார்கள்.

ஒருமுறையேனும் இந்த நிகழ்வில் நீங்கள் கலந்து, உங்கள் கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரவேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. இந்த பதிவின் நோக்கம், நான் அடைந்திருக்கும் பலனை அனைவரும் பெற வேண்டும். அனைவரும் மகிழவேண்டும்.

நன்றி  !!


இதனுடைய ஆங்கில பதிப்பகம்

The library I love

லிட்டில் லவ் லைப்ரரியின் முகநூல் குழு

https://www.facebook.com/littlelove.in/

4 thoughts on “நான் விரும்பும் நூலகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s