அழகிய காட்சியமைப்புக் கொண்ட விவசாய நிலத்தில், அமைதியான வீதிகளை பெற்ற ஒரு கிராமத்திற்கு நீங்கள் செல்லவேண்டுமா? சோழர்களால் 11 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அழகிய திருக்கோவிலுக்கு நீங்கள் செல்லவேண்டுமா? சென்னையிலிருந்து 1 மணி நேரத்திற்குள் ஏதேனும் ஆர்வமூட்டும் இடத்திற்கு செல்லவேண்டுமா? அப்படியென்றால், சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசையிலிருந்து 5கிம தொலைவில் அமைந்துள்ள நேமம் என்னும் கிராமத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
கிறிஸ்துமஸ் வார இறுதியில், என் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான இடத்திற்கு செல்ல முடிவுசெய்திருந்தேன். அப்பொழுது என்னுடைய நண்பர் Mohan Vel அவர்கள், அவர் வாழும் பகுதியிலுள்ள இடங்களை பற்றி முன்னமே என்னிடம் கூறியது, என் நினைவிற்கு எட்டியது. என் போன்ற வாகன பிரியருக்கு, அழகிய குளிர்காலத்தில் அதுவும் அதிகாலையில் வாகனம் ஓட்டுவதில் வரும் மகிழ்ச்சி வேறெங்கு கிடைக்கும்? அதனால் என் வீட்டிலிருந்து 15கிம தொலைவில் அமைந்துள்ள ஆவுண்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்குள்ள அற்புதங்களை அனைவருக்கும் பகிரவேண்டும் என்று நான் தீர்மானித்ததின் விளைவு தான் இந்த பதிவு.
ஆவுண்டீஸ்வரர் திருக்கோவில்
(அருள்மிகு அமிர்தாம்பிகை உடனுறை, ஆவுண்டீஸ்வரர் திருக்கோவில்)
என் நண்பரிடம் அவர் கிராமத்தில் நான் பார்வையிட இடங்களை கேட்டபோது, இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது என்றும் அது மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அவர் உறுதிப்படக் கூறினார். மத உணர்வுகளில் கனிவான உணர்ச்சிகளை கொண்ட நான் மற்ற இடங்களை கேட்கலானேன். ஆனால் அக்கோவில் அவர் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், கோவில்களின் கலை மற்றும் கட்டிட அமைப்புகளில் உள்ள என் ஆர்வம் அக்கோவிலுக்குச் இட்டுச்சென்றது.
அழகான படம் அல்லவா? 10 ஆண்டுகளாக இக்கோவிலின் புனரமைப்புக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தவர் Mohan Vel. இந்த அற்புதமான கோவிலின் மறுசீரமைப்பின் போது நடந்தவற்றை எல்லாம் விளக்கினார். இந்த கிராமத்தின் வடகிழக்கு (ஈசான்ய) பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் நெல் வயல்களால் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த மாபெரும் கோவில், ஜெயம்கொண்ட சோழனால் (ராஜாதிராஜா சோழர் I) கட்டப்பட்டது. இடையில் சோழன் என்னும் வார்த்தையை கேட்ட நான், பொன்னியின் செல்வன் நாவலின் காதலனாக, பெரும் குதூகலத்துடன் ஆர்வமுற்று இன்னும் பல அற்புதங்களை கேட்டறிந்தேன்.
கலைகள் மற்றும் கட்டிடமைப்புகளில் வல்லவர்களான சோழர்களை பற்றியும் அவர்களின் பெருமைகளை பற்றியும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். சோழர்களின் மீதுள்ள என் அன்பே அவர்களின் பெருமைகளை விவரிக்க காரணமாயிருக்கிறது. கோவிலின் இருப்பிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நுட்பமான சிலைகள்
இங்குள்ள சிலைகள் மிகவும் நுட்பமான முறையில் செதுக்கப்பட்டுள்ளதால், சில கோவில்களில் மட்டுமே இது போன்ற சிலைகளை உங்களால் காணமுடியும். விநாயக பெருமானின் அருளை பெற்ற பிறகு சிவ பெருமானின் அருளை பெற அவர் சன்னதியை சென்றடைந்தோம். 4.5அடி சிவலிங்கத்தை கண்டு பிரமித்து நின்ற நான், அதன் மீது சில புள்ளிகளை கண்டேன். மேலும் சிவலிங்கத்தை சுற்றியுள்ள சுவர்கள் ஆச்சரியமூட்டும் விதமாக காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிந்து நீரை வெளியில் கசிந்துகொண்டு இருந்தது. குறிப்பாக இந்தக் கற்கள் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிடம் அமைக்க பயன் படுத்தப்பட்டது எப்படி என்று யோசித்துப் பாருங்கள். மேலும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை கீழே பார்ப்போம்.
பிறகு அம்பாள் சன்னதிக்கு வருகையில், அங்கு அம்பாளின் தலை சிறிது சாய்ந்திருந்ததும் அவர்களின் வலது கால் சிறிது முன்னாள் வைக்கப்பட்டிருந்ததும் புதுவிதமாகவே இருந்தது. அவள் தலை சாய்த்து பக்தர்களின் குறைகளை கேட்கிறாள் என்று வரலாறு கூறுகிறது.
வீரபத்திரர் சிலை – இக்கோவிலில் இருக்கும் இந்த அரிய வீரபத்திரர் சிலை, சில கோவில்களில் மட்டுமே உங்களால் காண இயலும். இந்த கோவிலுக்கு செல்லும்போது, இந்த சிலையில் உள்ள நுட்பங்களை காணத்தவறாதீர்கள்.
முருகன் சிலை – இக்கோவிலின் மற்றொரு உயர்ந்த சிலை, அவர் தந்தையுடன் போட்டி போடும் விதமாக அமைந்திருக்கும்.

தியான மண்டபம்
முன்னதாக, கோமதீஸ்வரன் என்று அழைக்கப்பட்ட நபர் எல்லா கிராமத்தினருக்கும் தியானம் கற்றுக்கொடுக்க விரும்பினார். அதை நிறைவேற்ற முடியாமல் அவர் இறந்துபோக அவரது குடுபத்தினார்கள் அவர் நினைவாக இக்கோவிலில் தியான மண்டபம் ஒன்றை கட்டினர். அவரது நினைவாக இது கோமதீஸ்வரன் நினைவு தியான மண்டபம் என்று பெயரிடப்பட்டது.
சித்தர்கள் மற்றும் முனிவர்கள் அடங்கிய 18 படங்கள் இந்த தியான மண்டபத்தினுள் அழகாக அமைக்கப்பட்டிருக்கும். மிதமான வெளிச்சத்தை தரும் இங்கிருக்கும் விளக்குகள், ஒருவரின் வருகையின் போது அவர்களுக்கு மனஅமைதி தரும் வல்லமைவாய்ந்தது.
மரங்கள்
பல்வேறு உயிரினங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட பல வகையான மரங்கள் ஆலயத்தின் ஒரு புறத்தில் அரிதாக வைக்கப்பட்டுள்ளது. சிவனுக்கு உகந்த மரமான இங்கிருக்கும் வில்வமரத்தில், ஒரே காம்பில் ஏழு இதழ்களை நீங்கள் காணலாம். இதுவும் அரியவகையாகவே காணப்படும் மரமாகும்.
புறக்கணிக்கப்பட்ட குளம்
ஆலயத்தின் பின்னால் காணப்படும் இந்த குளம், கோவிலின் நிதி பற்றாக்குறையால் எந்த சீரமைப்பும் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் அறிமுகம் மக்களுக்கு இல்லாததே நிதி பற்றாக்குறைக்குக் காரணமாய் இருக்கிறது.

நன்கொடை நாடுதல்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிசயங்கள், இக்கோவில் பழம்பெரும் கோவில் என்றும் அரசாங்கம் மற்றும் மக்களின் கவனம் இதற்குத் தேவைப்படுகிறது என்றும் நமக்கு தெரிகிறது.
2000 ஆம் ஆண்டு இக்கோவிலின் மறுசீரமைப்பு முயற்சியை மேற்கொண்ட திரு குமார், ஆரம்பகாலத்தில் தனது பைகளில் இருந்து புனரமைப்பதற்கு பணம் கொடுத்தார். அருகே தங்கியிருந்த சில உறுப்பினர்கள் ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு, அங்குள்ள கிராமவாசிகளின் ஆதரவோடு இந்த கோவிலை சிறந்த முறையில் புதுப்பித்தனர். 2010ல் அனைவராலும் இக்கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இக்கோவிலிலிருந்து வெளியேறும் போது, மனம் பூரணஅமைதி அடைந்திருந்தது. அழகான கிறிஸ்துமஸ் பரிசுடன் இந்த அற்புதமான மாலை தென்றலில் நேமத்தை ஒரு முறை என் டியூக் 390 யில் வலம் வந்து அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.
கோவில் இருக்கும் இடம்
இந்த இடத்திற்கு ஒரு மாபெரும் வரலாறு உள்ளது. இக்கோவில் பலருக்கு நன்மை பயக்குவதில் பெரிதும் பெருமை வாய்ந்தது. இங்கு வருகையில் நீங்கள் அனைவரும் இதை தெரிந்துகொள்ளலாம்.
இதனுடைய ஆங்கில பதிவு
திருத்தியவர்