ராஜஸ்தான், பாலி மாவட்டத்தில் உள்ள ராமவாஸ் என்ற பகுதியில், குற்றவாளிகளால் சுட்டு கொள்ள பட்டு வீர மரணம் எய்திய மதுரவாயல் காவல் அதிகாரி பெரியபாண்டியன் பற்றியும், மொழி மற்றும் உள் மாநில ஒத்துழைப்பு, அதற்கான என்னுடைய பரிந்துரையையும், இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
பெரியபாண்டியனுக்கு ஆனது என்ன?
சென்னை கொளத்தூரில் உள்ள அடகு கடை ஒன்றில் நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் குறித்து, சென்னை காவல் துறை, சிறப்பு படை ஒன்றை ராஜஸ்தான் சென்று கொள்ளையர்களை பிடிக்க உருவாக்கியது. 6 பேர் கொண்ட கொள்ளையர்கள், 3.5 கிலோ தங்கமும், வெள்ளியும் மற்றும் 1 லட்ச ரூபாய் பணமும், அடகு கடையின் மேல்மட்டம் வழியாக ஓட்டை போட்டு கொண்டு வந்து திருடி, மறுநாள் ராஜஸ்தானில் உள்ள அவர்களது சொந்த ஊரான ராமவாஸுக்கு சென்றுள்ளனர்.
இதை அறிந்த போலீசார், மறுநாளே ராஜஸ்தான் சென்று 6 இல் நான்கு பேரை பிடித்துள்ளனர், இருந்தும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை பிடிக்காமல் திரும்பி சென்றனர். மீண்டும் சில தினங்களுக்கு முன்பு, இரண்டு முக்கிய குற்றவாளிகளை பிடிக்க, தனி படை ராமவாஸ் சென்றுள்ளது. இன்போர்மரின் தகவலின் அடிப்படையில், முப்தி உடையில் காவற்படை, அங்கு உள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் கூட தகவல் தெரிவிக்காமல் சென்றுள்ளனர். தகவல் தெரிவித்திருந்தால், ஒரு வேலை குற்றவாளிகள் எப்படியோ அதை தெரிந்து கொண்டு தப்பித்துவிடுவார்களோ என்று சென்னை சிறப்பு படை கருதியிருக்கலாம். அவர்கள் தான் அதற்க்கு பதில் கூற வேண்டும்.
புதன்(13-12-2017) அதிகாலை 2.30 மணி அளவில், காவற்படை வீட்டிற்குள் சென்றதும், ஒரு குற்றவாளியை கைது செய்தது. மற்றொரு குற்றவாளியை பற்றி விசாரித்ததில் அவன் பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருப்பதாக இவன் சொல்லியிருக்கிறான். அவனை பிடிப்பதற்காக உள்ளே சென்றபோது, அவன் உறவினர்கள் சுமார் 10 பேர், இவர்களை கண்டதும் கையில் இருப்பதை கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இது சரியான சமயம் அல்லவென்று தீர்மானித்து, அங்கிருந்து போலீஸார் ஓட்டம் பிடித்தனர். அப்போது பெரியபாண்டியனின் துப்பாக்கி தவறி விழுந்ததை கூட கவனியாமல் சென்றுள்ளார். அதை கையில் எடுத்த முக்கிய குற்றவாளி, அவரை சுட்டுக் கொன்றார். அங்கே என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
மொழியும் ஒத்துழைப்பும்
மொழி, மீண்டும் பிற மாநிலங்களுடன் நடவடிக்கை எடுக்க உரையாடல்களில், இன்னும் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. சென்னை சிறப்பு படை, முதல் நடவடிக்கையின் போது அங்கு இருக்கும் ராஜஸ்தான் உள்ளூர் காவற்படையிடம் உதவி கோருவதற்கு மிகவும் சிரமப்பட்டது. உள்ளூர் மொழியில் ஒரு தொடர்பு முகவர் கண்டு பிடித்து, எங்களுக்கு தேவையானதை பெற, மிகவும் கடினமாக இருந்தது. இதற்குள் குற்றவாளிகள் விஷயத்தை அறிந்து தப்பித்துவிடுகின்றனர்.
இதே போல் தஸ்வந்தின் (23 வயதான அவர், அவருடைய தயாராய் கொன்றதற்காகவும், பாலியல் தாக்குதலுக்குமாக குற்றம் சாட்டப்பட்டவர்) வழக்கும், தமிழ்நாடு காவல்துறை, மும்பையில் அவனை பிடிக்க சில தினங்களுக்கு முன்பு சென்று, பொது மக்களின் கோபத்துக்கு உள்ளாகி மிகவும் சிரமப்பட்டது. இறுதியில் இன்ஸ்பெக்டர் தனக்கு தெரிந்த அரைகுறையான ஹிந்தியை, அங்கு இறுதியில் வந்த உள்ளூர் சப்இன்ஸ்பெக்டரிடம் கூறி அந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
சென்னை தனி படை, ராஜஸ்தான் சென்ற பொது உதவி கோராமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா?
காவற்படை, பிற மாநிலங்களவையில் தாக்குதலுக்கு செல்லும் முன், அந்த மாநில காவற்படைக்கு தெரிவித்தும், அங்குள்ள தொடர்பு புள்ளியையும் அறிந்தபிறகும்தான் இங்கிருந்து செல்வார்கள். இது எந்த அளவிற்கு பெரியபாண்டியன் வழக்கில் நடந்திருக்க கூடும் என்று தெரியவில்லை.
பலநேரங்களில் குற்றவாளிகள், அங்கிருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் காவற்படையின் ஆதரவை பெறுகின்றனர். அங்கிருக்கும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை ஏற்க வேண்டுமென்று, சில தாக்குதலுக்கு வெளிமாநில காவற்படைக்கு உள்ளூர் காவற்படை ஆதரவு அளிப்பதில்லை.
இதெல்லாம் கருதி தான் என்னமோ, பெரியபாண்டியன், தன பிள்ளைகளிடம் அடிக்கடி, போலீஸ் வேலை மிகவும் இறுக்கமானது என்றும், அதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும் தன் இரு பிள்ளைகளுக்கு கூறுவாராம்.
தீர்மானம்
இந்த வழக்கை பற்றி அனைவரும் அறிவது மிகவும் முக்கியமானது ஏனென்றால், நாம் இழந்திருப்பது நம்முடைய பாதுகாவலர்களில் ஒருவர். மக்களுக்கு காவற்படையின் செயல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் செயல்களில் எப்போது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நன்கு தெரியப்படுத்தவேண்டும். குற்றம் செய்தவன் குற்றவாளி தான், தீவிரவாதி அல்ல. அவனுக்கு எங்கிருந்து ஒரு போலீஸ் அதிகாரியை சுட இவ்வளவு தைரியம் வந்தது?
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை இந்த நீதிமன்றம் பெற்று தந்து, இந்த வழக்கை ஒரு எடுத்துக்காட்டாக, காவற்படைக்கும் – பிரமாநிலங்களவை செயல்பாடுகளில் தங்களை சீர்படுத்தவும் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பிறப்பிக்கவும் வேண்டும்.
பொதுவாக, வடமாநிலங்களில் இருக்கும் குற்றவாளிகள் எளிதில் துப்பாக்கி வைத்திருப்பார்கள். ஆதலால் சரியான திட்டமும், திறமையான படைகளாலும் மட்டுமே அங்கிருக்கும் குற்றவாளிகளை பிடிக்கமுடியும். அரசாங்கமும் அடிக்கடி இதுபோல் உள்ள குற்றவாளிகளை தனி படை அமைத்து கைது செய்து, அவர்களிடம் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்து, அதன் மூலதனத்தையும் அடியோடு ஒழித்து விட வேண்டும். அதுமட்டும்மின்றி இதுபோன்ற மாநிலங்களில், இன்போர்மராக வேலை செய்கிறவர்கள், இரட்டை முகவர்கள் வேடம் பூண்டுவதுண்டு. இந்த வழக்கில், வெறும் 6 பேர் கொண்ட குழு மட்டுமே அவர்களை பிடிக்க, உள்ளூர் காவற்படையிடம் கூட தெரிவிக்காமல் சென்றதால் மட்டும் ஒரு வீராதிருமகன் இயற்கை எய்தினார் என்று நாம் சொல்லிவிடமுடியாது.
உள்ளூர் காவற்படையிடம் இருந்து ஆதரவு கோராமல், எது தடுத்தது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

பதிவின் சுருக்கம்
- தமிழ்நாட்டில் இருந்து, 6 பேர் கொண்ட சிறப்பு படை ஒன்று, ராஜஸ்தானில் பதுங்கியிருக்கும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை பிடிக்க, உள்ளூர் காவற்படைக்கு கூட தெரிவிக்காமல் சென்றுள்ளது.
- பெரியபாண்டியன் சுட்டுக் கொள்ள பட்டர். அவருடைய துப்பாக்கியை கொண்டே அவரை கொன்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
- மொழி மற்றும் ஒத்துழைப்பு இல்லாமையே, இந்த சம்பவத்துக்கு ஒரு புள்ளியாக கருதப்படுகிறது.
- சரியான திட்டம் தீட்டுதல் மற்றும் உள் மாநில ஒத்துழைப்பை சீர்படுத்தினால், இதுபோன்ற சபாவங்களை வருங்காலத்தில் தடுக்கக்கூடும்.
- அரசாங்கமும், தனி படை அமைத்து, இது போன்ற குற்றவாளிகளை பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் மற்றும் அதன் மூலதனத்தையும் அடியோடு ஒழித்துகட்டவேண்டும்.
(என்னுடைய முதல் தமிழ் பதிவு இது. பிழை இருந்தால் மன்னித்து அதை கீழேயுள்ள கருத்து பதிவத்தில் தெரிவிக்கவும்)